நோர்வேயில் ஒஸ்லோ மாநகரசபை இசைக் கல்லூரியில் (Oslo musikk - og kulturskole) 2002 ல் இருந்து சங்கீத ஆசிரியராக பணியாற்றுகின்றேன்.
இலங்கை பருத்தித்துறையில் பிறந்து, மட்டக்களப்பில் வளர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இசைத்துறையிலும் (1982 -1986) பின்னர் தமிழ்நாடு அரசினர் இசைக் கல்லூரியிலும் (1987-1989) நோர்வே musikkhøgskole விலும் (2000-2001, 2005-2007) இசை பயின்றேன்.
எனது யாழ் பல்கலைக் கழக காலத்தில் இசைத்துறை மாணவர் பிரதிநிதியாகச் செயல்ப் பட்டேன்.
எனது வாழ்வின் முக்கியமான திருப்புமுனையென்று மண்சுமந்த மேனியர் -1 நாடக அரங்கில் முக்கிய பாடகியாக பங்குபற்றியதையே நினைவுகூருகிறேன்.
யாழ் பல்கலைக் கழக கலாச்சாரக் குழு 1985ல் தயாரித்த இந்த நாடகம் விடுதலைக்கான கலை நிகழ்வுகளில் ஒரு மைல் கல்லாகும்.
1998ல் இருந்து பல் இன இசை நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து தீவிரமாக செயல் படுகிறேன்.
1985ல் இருந்து பாரதியார் பாடல்களையும், ஈழத்துக் கவிஞர்களான ஜெயபாலன் (எனது கணவர்) ,சேரன், வில்வரட்ணம் போன்றவர்களது பாடல்களையும் இலங்கை, தமிழகம், ஐரோப்பா, கனடா மேடைகளில் பாடிவருகிறேன்।
இந்த வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாசுகி ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்கள்
Consert
Vasuky Jayapalan
No comments:
Post a Comment