ஆனால் இன்று வரை தமது பொக்கிஷங்களான நாட்டுக்கூத்து , வசந்தன்பாடல் போன்றவற்றை காப்பாற்றும் அண்ணாவிமார்களையும் கிராமியக்கலைஞர்களையும் வாழவைக்கும் முயற்சியில் எவருமே முன்வரவில்லை!
நாடகப்பட்டறைகள்,கூத்துப்பட்டறைகள் போன்றவற்றை வருடம்தோறும் நடாத்தும் கலைக்கூடங்கள் இதுவரையும் எம் மத்தியில் இல்லை!
ஆனால் கர்நாடக சங்கீதம் ,பரதநாட்டியம் போன்ற கலைகளை நடாத்தும் கலைக்கூடங்கள் மூச்சுவிடும் இடங்களெல்லாம் நீக்கமற உண்டு!
ஏன் இந்த பாரபட்சம் ஈழத்திலும் புலத்திலும்?
கண்ணைமூடிக்கொண்டு ஒருகணம் பின்வருவனவற்றை கற்பனைபண்ணிப் பாருங்கள் !
- ஆபிரிக்க கலை என்றால் எம் கண்முன் நிற்பது அவர்களது ஜெம்பெ, கோரா போன்றவாத்தியங்களும் அவர்களது ஆட்டமும்.
- அராபியக்கலை என்றால் எம் கண்முன் நிற்பது அவர்களது சந்தூர், ஊட் போன்ற வாத்தியங்களும் அவர்களது ஆட்டமும்.
- இந்தியக்கலை என்றால் எம் கண்முன் நிற்பது அவர்களது வீணை, சித்தார்,மிருதங்கம்,தபேலா,நாதஸ்வரம்,சனாய் போன்றவாத்தியங்களும் அவர்களது பரதநாட்டியம்,கதக் போன்ற ஆட்டங்களும்.
- நோர்வேஜியக்கலை என்றால் எம் கண்முன் நிற்பது அவர்களது ஹார்லிங் வயலினும் அவர்களது ஆட்டமும்.
- சிங்களவர்களின் கலை என்றால் அவர்களது ரபான்,டோலக் போன்ற வாத்தியங்களும் கண்டிய நடனம்,கோலம் போன்ற ஆட்டங்களும்.
- ஈழத்தமிழர் கலை என்றால் என்ன உங்கள் கண்முன் தோன்றுகிறது?
இன்னும் நாம் மனப்பால் குடிக்கலாமா?
பழம் பெருமையைத்தான் பேசலாமா?
2 comments:
நல்ல முயற்ச்சி. நீங்கள் தமிழ் சங்கம இசையில் வெற்றிகரமாக மூன்னேறி வருகிறீர்கள் உங்கள் முயற்ச்சிகள் வெற்றிபெற வாழ்ழ்த்துகிறேன்.
வ.ஐ.ச.ஜெயபாலன்
Nanri Jayapalan
Post a Comment